இலங்கை இளைஞர்கள் இருவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வீசா காலாவதியான நிலையிலும் பிரித்தானியாவில் தங்கியிருந்த குற்றத்திற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் உணவகம் ஒன்றில் சட்டவிரோதமாக வேலை செய்துவந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ் இலங்கை இளைஞர்களை வேலைக்கமர்த்தியிருந்த உணவகத்தின் உரிமையாளருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.