நீச்சல் உடையில் இருந்த கருப்பின பெண் மீது சரமாரியாக தாக்குதல் : பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்!!

848

அமெரிக்காவில், பொது இடத்தில் நீச்சல் உடையில் இருந்த கருப்பினப் பெண்ணை பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்மூடித்தனமாகத் தாக்கும் வீடியோ யூ-டியூபில் பரவியதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள மெக்கின்னி நகர பொலிஸாருக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று, கிரைக் ராஞ்ச் என்ற இடத்திற்கு அருகே சிலர் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரில் ஒருவர் அங்கு நீச்சல் உடையில் இருந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதைத் தடுக்க வந்த இளைஞர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். மிகவும் சுமூகமாக கையாண்டிருக்கக் கூடிய சூழலை தனது ஆர்வக் கோளாறால் தேவையற்ற பதட்டத்தை உருவாக்கியுள்ளார் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது கையடக்கத்தொலைபேசில் படம்பிடித்து அதை யூ-டியூபில் பதிவேற்றம் செய்துள்ளார். குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதையடுத்து நாடு முழுவதும் இருந்து குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதேவேளை குறித்த பொலிஸ் அதிகாரியின் செயல் கவலையளிப்பதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

1 2