காங்கிரசில் இணைந்ததால் 102 வயது மூதாட்டிக்கு கிடைத்த பதவி!!

819

Old Lady

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் சாம்ராஜ் நகர் மாவட்டம் தொண்டாலத்தூர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 102 வயது மூதாட்டி கவுதம்மா வெற்றி பெற்றார்.

அவரை தங்கள் கட்சியில் இணைக்க காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் முயற்சி செய்து வந்தன. அம்மாநில மந்திரியாக உள்ள மகாதேவா, காங்கிரஸ் கட்சியில் இணையும்படி கவுதம்மாவுக்கு அழைப்பு விடுத்தார்.

இதையேற்று மாதேஸ்வரன் மலைக்கு சென்ற கவுதம்மா, மகாதேவா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு, கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியை வழங்க காங்கிரஸ் கட்சி தற்போது முடிவு செய்துள்ளது.

விரைவில் கவுதம்மா முறைப்படி கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். மேலும் கவுதம்மாவின் கிராமத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக அம்மாநில மந்திரி மகாதேவா உறுதியளிதுள்ளார்.

கர்நாடக வரலாற்றில் 102 வயது பெண் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. இதுதான் நாட்டிலும் முதல் முறை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.