இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவு : பேரறிவாளன் பேட்டி!!

276

Perarivalan

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட பேரறிவாளன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சிகிச்சைக்காக அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பேரறிவாளனின் வழக்கறிஞர் சிவக்குமார் மூலமாக தனியார் தொலைக்காட்சி ஒன்று, சில கேள்விகளை பேரறிவாளனிடம் முன் வைத்தது. அதற்கு அவர் கடிதம் மூலமாக பதில் அளித்துள்ளார்.

கேள்வி: கடந்த 24 ஆண்டு கால சிறை வாழ்க்கை எப்படி இருந்தது?

பதில்: பெரிய பாதிப்பு இல்லாவிட்டாலும், சின்ன சின்ன பாதிப்புகளுடன் கூடிய மன அழுத்தத்துடன் சிறை வாழ்வை நகர்த்தி வருகிறேன்.

கேள்வி: சிறைக்குள் மருத்துவ சிகிச்சைகள் முறையாக அளிக்கப்படுகிறதா?

பதில்: முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கேள்வி: தமிழக அரசு விடுதலை செய்யும் முயற்சியைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு சென்றுள்ளதே?

பதில்: வழக்கு விசாரணையின் முடிவு நீதியின் பக்கம் இருக்கும் என நம்புகிறேன். கடந்த காங்கிரஸ் மத்திய அரசு உணர்ச்சி மேலீட்டில் செய்த அதே தவறை தற்போதைய மத்திய அரசு செய்யாது என நம்புகிறேன். மாநில அரசின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.

கேள்வி: விடுதலை இல்லாமல் சிறைவாழ்க்கை அனுபவித்து வருவதை எப்படி உணர்கிறீர்கள்?

பதில்: 24 ஆண்டுகால இளமையை இழந்திருந்தாலும் நம்பிக்கை தளரவில்லை. சிறை, இழப்பையும் தந்தது. நிறைய கற்றும் தந்தது.

கேள்வி: ராஜீவ்காந்தி கொலை விவகாரம் மற்றும் விசாரணையின் போக்கு அரசியலாக்கப்படுகிறதா?

பதில்: ஆம். அதனால் தான் தியாகராஜன் ஐபிஎஸ் போன்ற அதிகாரிகளே நான் நிரபராதி என கூறிய பின்னரும் எனக்கு விடுதலை, நீதி கிடைக்கவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.