குழந்தைகளின் பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்து பேய்களின் நகரமாக மாறி வரும் போர்த்துகீசிய கிராமம் ஒன்றில் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு பெற்றோருக்கும் 5 ஆயிரம் யூரோ வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
போர்த்துக்கல் நாட்டின் அல்கோடிம் கிராமத்தில் கடந்த 20 வருடத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்து விட்டனர். இதனால் போர்த்துக்கல் நாட்டிலேயே மிகவும் குறைவாக அங்கு, 0.9 என்ற அளவிலேயே பிறப்பு விகிதம் இருப்பது தற்போது தேசிய அளவிலான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
சர்வதேச பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட போர்த்துக்கல்லில் வேலையில்லா திண்டாட்டம் காரணமாக அன்றாட வாழ்விற்கே சிரமப்படும் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்தே வாழ்கின்றனர். இந்நிலையில் அரசின் இந்த அறிவிப்பால் பல தம்பதிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதிகாரிகளோ, பிறப்பு விகிதம் நிச்சயம் கூடி விடும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.





