வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப்போட்டி மாகாண உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.ஏ.சத்தியபாலன் தலைமையில் 08.06.2015 அன்று வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 15,17,19 வயதுப் பிரிவுகளில் மூன்று ஆண்கள் அணியும், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி ஒன்றுமாக, 60 பாடசாலைகள் கலந்துகொண்டன.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் பரிசில்களையும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வழங்கினார்.






