மண்சரிவை தொடர்ந்து அடுத்த சோகம் : நேபாளத்தில் இன்று இரு நிலநடுக்கங்கள்!!

1275

Nepal

நேபாளத்தில் இன்று 2 முறை தொடர்ந்து நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி ஏற்பட்ட 7.9 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் நேபாளத்தில் இலட்சகணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. நில நடுக்க பாதிப்பால் இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இலட்சகணகானவர்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கததை தொடர்ந்து நேபாளத்தில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் 25ஆம் திகதிக்கு பிறகு நேபாளத்தில் 4 ரிக்டர்களுக்கும் மேலான அளவில் இதுவரை 300 முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் இன்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நில அதிர்வு உணரபட்டுள்ளது. இன்று அதிகாலை 1.22 மணியளவில் தோலகா மாவட்டத்தில் மையம் கொண்டு 4.4 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. பின்னர் 10.19 மணியளவில் மீண்டும் அதே இடத்தில் மையம் கொண்டு 5.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.

இதேவேளை நேபாளத்தின் வடகிழக்கு பகுதியில் நேற்று ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள தோடு ஆறு கிராமங்கள் மண்ணில் புதையுண்டமையும் குறிப்பிடத்தக்கது.