வவுனியாவில் ஆசிரியர் தாக்கி மாணவன் வைத்தியசாலையில் அனுமதி..!

384

Sri_Lanka_Vavuniya_Districtவவுனியாவில் உள்ள பிரபல தமிழ் பாடசாலையில் 5ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஆசிரியர் ஒருவரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கெனடி தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பிட்ட ஆசிரியர் மாணவன் அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி வைக்குமாறு கூறியபின்னர் அம்மாணவனுக்கு கன்னத்தில் கடுமையாக தாக்கியதுடன் கோபம் தீராத காரணத்தால் அம்மாணவனின் முதுகில் குனிய வைத்து பலமாக தாக்கியுள்ளார்.

ஆசிரியரின் தாக்குதலால் மாணவன் பாதிப்படைந்த நிலையில் வவுனியாவில் உள்ள தனியார் வைத்திசாலையில் உடனடியாக சிகிச்சைக்கு சென்ற சமயம் தனியார் வைத்தியாலையின் வைத்திய அதிகாரி உடனடியாக பொது வைத்தியசாலையை நாடுமாறு பணித்துள்ளார்.

எனவே மாணவன் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவித்தார்.