வவுனியாவிலுள்ள முன்னாள் போராளிகளைப் பார்வையிட்ட மகளீர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்!!(படங்கள்)

840

மகளீர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் கடந்த சனிக்கிழமை (20.06.2015) பிற்பகல் வவுனியா புனர்வாழ்வு முகாமிற்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்டுவரும் முன்னாள் போராளிகளின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட பிரதி அமைச்சர் முகாமில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்படும் முன்னாள் போராளிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இதன்போது தமக்கென வழங்கப்பட்டுள்ள ஒருவருட கால புனர்வாழ்வுக் காலத்தினை குறைத்துத் தருமாறு முன்னாள் போராளிகள் பிரதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனை ஏற்றுக்கொண்ட பிரதியமைச்சர் அவர்களின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

-பிராந்திய செய்தியாளர்-

vijayakala (1) vijayakala (2) vijayakala (3) vijayakala (4) vijayakala (5) vijayakala (6)