பெண்கள் ஆண்களிடம் பழகும் போது தவிர்க்க வேண்டியவை!!

590

frnd

அனைத்துப் பெண்களுக்கும் தோழர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களிடம் என்னவெல்லாம் பேசலாம் மற்றும் என்னவெல்லாம் பேசக் கூடாது என்பதை பெண்கள் அறிந்துகொள்வது அவசியம்.

முதலில் அநாவசியமாக, பெண்கள் தங்கள் குடும்பப் பிரச்சனைகளை ஆண்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இப்படிப்பட்ட பகிர்தலில் ஆரம்பிக்கும் நெருக்கமும், பரிதாப உணர்வும் பாலியல் வற்புறுத்தலுக்கு தூண்டுகோலாகவும், ஆண்கள் பெண்களிடம் வேறு மாதிரியான எதிர்பார்த்தலுக்கும் அடித்தளமாக அமைகிறது.

பெண்கள் தங்களின் உண்மையான நண்பர்களிடம் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொண்டு அவர்களால் அப்பிரச்சனைக்கு தீர்வு காண முயலவேண்டும்.

இரட்டை அர்த்தம் தரும்படிப் பேசுபவர்களிடம் இருந்து பேசுவதை தவிர்த்து விடுங்கள் அல்லது அனைத்துப் பெண்களும் சேர்ந்து அத்தகைய ஆண்களிடம் பேசுவதை தவிர்த்து விடுங்கள்.

பாலியல் நோக்கத்துடன் பழகுபவர்களின் உறவைத் துண்டித்து விடவும் அல்லது அவர்களிடம் எடுத்துகூறி கண்டிக்கலாம் மேலும் அனைத்து தோழிகளும் சேர்ந்து போய் அறிவுரை கூறலாம்.

அலுவலகத்தில் ஆணும் பெண்ணும் ஆரோக்கியமான நட்புடன் பழகுவது நல்லது. ஆனால் சாதாரண தோழமையின் எல்லையைத் தாண்ட ஆண்கள் முற்படுகையில், மிகுந்த கவனத்துடன் பெண்கள் இருக்க வேண்டும்.