முதல் இரண்டு போட்டிகளுக்கு தினேஸ் சந்திமால் தலைவர்..!

395

chandimalதென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு இலங்கை அணியின் தலைவராக இளம் வீரர் தினேஸ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.

உப தலைவராக லஹிரு திரிமான்ன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மத்தியூஸுக்கு இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற முக்கோண தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் உரிய நேரத்திற்கு பந்துவீசி முடிக்காததால் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலால் இப்போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.