முல்லைத்தீவு கவிஞர்கள் ஒன்றிணைவில் முல்லைத்தீபனின் தொகுப்பில் “முல்லைக் கவிதைகள்” எனும் நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும் 27.06.2015 சனிக்கிழமை காலை 11 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
துணுக்காய் பிரதேச செயலாளர் திரு.சி.குணபாலன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஈழத்துக் கவிஞர் செல்லத்துரை சுதர்சன் (சிரேஸ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை – பேராதனைப் பல்கலைக்கழகம்) அவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக திரு இ.பிரதாபன் (பிரதேச செயலாளர் -புதுக்குடியிருப்பு), அடங்காப்பற்றான் அருணா செல்லத்துரை, ஈழத்துக் கவிஞர் முல்லை முஸ்ரிபா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இன் நிகழ்வு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பிலும் ஒட்டுசுட்டான் ம.வி பழைய மாணவர்சங்க பிரித்தானியக்கிளையின் அனுசரணையுடன் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வெளிவரும் மாவட்ட ரீதியான முதலாவது கவிதைத் தொகுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.