புன்னகை அமைப்பின் (Smile Foundation) கல்வி, வாழ்வாதாரத்திற்கான உதவிக்கர நிகழ்வு கடந்தமாதம் துணுக்காய் பிரதேச செயலாளர் திரு.S.குணபாலன் தலைமையில் துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக ஸ்மைல் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகர்களும், மாந்தை, துணுக்காய் பிரதேச செயலக தவிசாளர்களும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வின்போது மாற்றுத் திறனாளிகளுக்கான சுயதொழில்வாய்ப்பிற்கான நிதிஉதவி, பொருள் உதவி (நீர்மெத்தை, மின்விசிறி, சைக்கிள்), 60 மாணவர்களுக்கு பாடசாலைப் பைகள் உபகரணங்களும், 20 குடும்பத் தலைவிகளுகான உடைகளும் வழங்கப்பட்டன.






