வவுனியாவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஆரம்பம்!!(படங்கள்)

1054

வவுனியா விருந்தினர் விடுதியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் வடமகாணசபை உறுப்பினர்கள் பங்குபற்றும் கலந்துரையாடல் இன்று (06.07.2015) காலை 10.30மணிக்கு ஆரம்பமாகி மாலையில் முடிவடையவுள்ளதாக கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இக்கலந்துரையாடலில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளின் தலைவர்கள் பங்குபற்றியுள்ளனர். இக் கலந்துரையாடலில் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் கட்சிகளிடையே ஆசன ஒதுக்கீடு தொடர்பாக முக்கியமாக கலந்துரையாடப்படவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

-பிராந்திய செய்தியாளர்-

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA