அரசியலில் இருந்து விலகினார் சனத் ஜயசூரிய!!

683

Sanath

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரிய இராஜினாமா செய்துள்ளார்.

அனைத்து அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் தான் விலகுவதாகவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் சனத் அறிவித்துள்ளார்.

தற்போது வெளிநாட்டுக்கு விஜயம் செய்துள்ள சனத் ஜயசூரிய தொலைபேசி ஊடாக கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.