ரஷ்ய எதிரணி போராட்டத் தலைவருக்கு 5 ஆண்டு சிறை..

344

Alexei-Navalnyரஷ்யாவில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துவந்த அலெக்ஸி நவால்னி மீதான பண மோசடிக் குற்றங்களை உறுதிப்படுத்தியுள்ள நீதிமன்றமொன்று அவருக்கு5ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்துள்ளது.

எதிரணி போராட்டங்களை முன்னின்று நடத்திவரும் இளம் தலைவராக அவர் பார்க்கப்பட்டார். அரசுக்குச் சொந்தமான மரப்பலகை நிறுவனத்தின் அரை மில்லியன் டாலர்கள் பணத்தை கையாடியதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அலெக்ஸி நவால்னி மறுத்திருந்தார்.

தன்மீதான குற்றச்சாட்டு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று அவர் கூறியிருந்தார்.

தன்மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி நீதிபதி தீர்ப்பளித்தபோது நவால்னி நக்கலாக புன்முறுவல் காட்டியுள்ளார். வரும் செப்டம்பரில் நடக்கவுள்ள தேர்தலில் நவால்னி மாஸ்கோ மேயர் பதவிக்காக போட்டியிடவிருந்தார்.

ஆனால், தனது தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டில் வெற்றிபெற முடியாமல்போனால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது போகலாம் என்று செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனிடையே இவரது இந்த 5 ஆண்டுகால சிறைத்தண்டனை, 2018-ம் ஆண்டில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விடாமலும் இவரைத் தடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.