வவுனியாவில் 26வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு அபிவிருத்திப் பணிகள்!!(படங்கள்)

1433

வவுனியாவில் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினால்(புளொட்) பேரூந்து தரிப்பு நிலையங்கள், நூல் நிலையங்கள், பொது நோக்கு மண்டபங்கள், முன்பள்ளிகள், தாய் சேய் நிலையங்கள் என பல்வேறு அபிவிருத்திகள் மேட்கொள்ளப்பட்டு வருகின்றது.

மக்கள் கேட்டுக்கொண்டதிற்கிணங்க புலம்பெயர் நாடுகளில் உள்ள புளொட் உறுபினர்களின் பங்களிப்புடன் புளொட் இயக்கத்தின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வட மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பணிப்புரைக்கமைய, வவுனியா மாவட்ட இணைப்பாளரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஆரம்ப புனரமைப்பு பணிகளில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உறுப்பினர்களான நிஷாந்தன், ரவி, காண்டீபன் ஆகியோருடன், அம்பாறை மாவட்டத்திலிருந்து வருகை தந்த டாக்டர் சோதி (அ.ஜெயகுமார்) ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தோழர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் வீரமக்கள் தினத்தின் நிகழ்வுகள் எதிர்வரும் 13.07.2015 அன்று காலை 10.00 மணி முதல் ஆரம்பமாகி இறுதி நிகழ்வுகள் 16.07.2015 மாலை 4.00 மணி தொடக்கம் நடைபெற இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

IMG_9942 IMG_9944 IMG_9947 IMG_9948 IMG_9954 IMG_9958 IMG_9961 IMG_9963 IMG_9964 IMG_9971 IMG_9974