பாம்புக்கு முட்டையும் பாலும் வைப்ப‍து ஏன் : அறிவியல் உண்மைகள்!!

386

Paapbu

நமது வீட்டில் இருக்கும் பெண்கள், பாம்பு புற்றுக்குள் முட்டையை வைத்து, அதில் பாலையும் ஊற்றுவார்கள். கேட்டால் பாம்பு பாலையும் முட் டையையும் விரும்பிக் குடிக்கும் என்பார்கள்.

ஆனால் உண்மை என்ன வென்றால்,
பாம்புக்கு முட்டையும் குடிக்காது பாலையும் குடிக்காது. பின் ஏன் பாம்புக்கு முட்டையும் பாலையும் கொடுக்கிறார்கள். இதற்கான விஞ்ஞான விளக்க‍ம் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ள‍து.

பெருங்காடுகளிலும் மலைக்குகைகளிலும் ஆதி மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். அந்த ஆதி மனிதர்களுக்கு இந்த பாம்புகள்தான் பெரிய உயிரிழப்புக்களும் பெருத்த காயங்களும் ஏற்பட்டு அவர்களுக்கு பெருந் தலைவலி யாகவே இருந்து வருகிறது.

இதனை தடுக்க‍வும், தங்களைத் தற்காத்து கொள்ள‍ ஒரு உத்தியைக்கையாண்டார்கள்.
அந்த உத்தி அவர்களுக்கு பெரிய அளவில் கைகொடுத்த‍து.

அந்த உத்தி என்னவென்றால், பாம்புகளைக் கொல்ல‍ மனமில்லாமல் அவைகளை தெய்வங்களாக்கி அந்த புற்றுக்குள் முட்டையையும் பாலையும் ஊற்றினார்கள். பாம்புகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த‍ எண்ணினார்கள். அதன்படி இந்த பாம்புகள் இனப் பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம்.

பெண் பாம்பு, தான் உடலுறவுக்கு தயார் என்பதை ஆண் பாம்புக்கு உணர்த்த‍ தனது உடலில் இருந்து பரோமோன்ஸ் என்ற ஒருவித திரவத்தை அந்த ஆண் பாம்புக்கு காற்றின் மூலமாக அனுப்பும். அதனை நுகர்ந்த அந்த ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வந்து கலவிக்கொள்ளும்.

பாலிலிருந்தும் முட்டையிலிருந்தும் வெளிப்படும் ஒரு வித வாசனை, இந்த பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தி இனச் சேர்க்கையை தடுத்து அதன் மூலம் இன‌ப்பெருக்க‍த்தை கட்டுப்படுத்துகிறது.