வவுனியாவில் இன்று (11.07.2015) காலை 8.30 மணியளவில் தாண்டிக்குளத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
ஓமந்தையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் வண்டியைச் செலுத்திய புத்தளம் உடப்பைச் சேர்ந்த 60 வயதுடைய வீரபத்திரன் பாலகிருஸ்ணன் படுகாயங்களுடன் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
-பிராந்திய செய்தியாளர்-