ஆந்திரா கேதாவரி ஆற்றில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புஷ்கரம் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலியானதுடன் 29 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் கோதாவரி புஷ்கரம் விழா இன்று ராஜமுந்திரியில் நடைபெற்றது.
இந்த ஆண்டு குரு பகவான் சிம்மராசியில் பிரவேசிப்பதால் இவ்விழா மகா கோதாவரி புஷ்கரமாக கொண்டாடப்படுகிறது. இன்று தொடங்கிய இவ்விழா எதிர்வரும் 25 ஆம் திகதி வரை 12 நாட்கள் நடைபெறும்.






