ஒரே மேடையில் ரஜினி-கமல்-அமிதாப்..!

350

100-years-cinemaஇந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் அமிதாப் & ஷாரூக்கான் இருவரும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.தென்னிந்திய சினிமாவின் பிறப்பிடம் சென்னைதான். ஷூட்டிங் நடத்துவது முதல் அதை புராசசிங் செய்வதுவரை இங்குதான் பணிகள் நடந்தன. இதை மனதில் வைத்து சினிமா நூற்றாண்டு விழாவை சென்னையில் கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள்.அந்த விழாவில் 4 மொழிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் 50 பேர் கவுரவிக்கப்பட உள்ளனர்.

இந்த பிருமாண்டமான விழாசென்னையில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதிவரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த விழாவின் தொடக்க நாள் அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, கேரள முதல்வர் உம்மன்சாண்டி ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ஷாரூக்கான் ஆகியோரும் அதே தினத்தில் விழாவில் பங்கேற்கிறார்கள்.

முதல் நாள் விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் சிறந்த 50 கலைஞர்களின் உருவபடங்கள் அடங்கிய தபால்தலை வெளியிடப்படுகிறது.

இரண்டாவது நாள் சிறப்பு விருந்தினர்களாக ஆந்திர முதல்வரும், கர்நாடக முதல்வரையும் அழைத்திருக்கிறாகள்.

ராயபேட்டை ஒய்.எம் சி ஏ மைதானத்தில் நடக்கும் இந்த விழாவின் கடைசி நாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார். அத்துடன் 4 மாநில முதல்வர்களும் பங்கேற்க உள்ளனர்.குறிப்பாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் உட்பட முக்கிய திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஹைலைட்டாக இந்திய சினிமாவின் நூற்றாண்டை நினைவுபடுத்தும் விதமாக இசைஞானி இளையராஜா இசையில் ஒரு பாடலும், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு சிறப்பு பாடலும் கடைசி நாள் விழாவில் இசைக்கப்படுகிறது.இதற்கு தென்னிந்திய ஹீரோக்கள் ஒன்று சேர்ந்து நடனமாடப் போகிறார்கள்.