
மிசோரத்தில் ஸ்மார்ட்போன் மோகத்தால் 16 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிசோரத்தில் சிறுவன் ஒருவன் அக்கா மற்றும் அவரது கணவருக்கு மாநில அரசின் நல உதவியாக கிடைத்த 66 ஆயிரம் ரூபாய் வீட்டில் இருப்பதை அறிந்துள்ளான்.
இதையடுத்து அந்த பணத்தில் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்ட சிறுவன், அக்காவிடம் பணம் கேட்டுள்ளான்.
ஆனால் அவன் கேட்டபடி பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த சிறுவன், இருவரையும் துப்பாக்கியால் சுட்டதோடு கோடாரியால் வெட்டி கொன்றுள்ளான்.
மேலும், 36 ஆயிரம் ரூபாயை திருடிக்கொண்டு தற்போது மாயமாகிவிட்டான். தற்போது பணத்துடன் மாயமான சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.





