ஆடிப்பிறப்பை முன்னிட்டு நேற்று வவுனியாவில் பெரும்பாலான பாடசாலைகளில் ஆடிக்கூழ் காய்ச்சி தமிழர் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளுடன் ஆடிப்பிறப்பு கொண்டாடப்பட்டது.
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நேற்று (17.07.2015) ஆடிப்பிறப்பை முன்னிட்டு பாடசாலை அதிபர் தமைமையில் பல்வேறு கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஆசிரியர்களும் மாணவர்களும் ஆடிக்கூழினைக் காய்ச்சி ஆடிப்பிறப்பினை கொண்டாடி மகிழ்ந்தனர்.






