சலுகைகளை வழங்கி வாக்குக் கேட்பவர்களை புறம்தள்ளி மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும் : சிவசக்தி ஆனந்தன்!!(படங்கள், காணொளி)

280

நேற்று (19.07.2015) காலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சிவசக்திஆனந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..

18- 20 ஆசனங்களைப் பெறவேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உள்ளது. தமிழ் மக்களாகிய நீங்கள் தேர்தல் தினத்தன்று 100 சதவீதம் வாக்குகளைஅளிக்கவேண்டும்.

தற்போது வன்னி மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. வவுனியா, மன்னார், முல்லைத்திவு மாவட்டத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டிய தேவை உள்ளது.

20 வருடகாலமாக சிறைச்சாலைகளில் இருக்கும் இளைஞர்கள் தங்களின் விடுதலைக்காக ஏங்கிக் காத்திருக்கிறார்கள். 20 வருடகாலமாக சிறையிலிருக்கும் இவர்கள் ஒரு மனநோயாளியாக மாற்றப்பட்டுள்ளார்கள்.

இராணுவத்திடம் சரணடைந்த பல நூற்றுக்கணக்கான மக்களுக்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை. வெள்ளைவானில் கடத்தப்பட்ட எம் தமிழ் மக்களின் கதி என்னவென்றும் தெரியவில்லை.

பல கிராம மக்கள் தங்களின் சொந்தப் பிரதேசங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதியஅரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டிய நிலமை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளது.

வீதிகள் புனரமைப்பின்மை, வீட்டுத்திட்டமின்மை, மின்சாரமின்மை, குடிநீர்ப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறுபட்ட பிரச்சனைகள் மக்களிடையே காணப்படுகின்றது.

சில வேட்பாளர்கள் வறிய மக்களைப் பயன்படுத்தி தையல் இயந்திரம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குடும்பத்திற்கு 10000 ரூபா போன்றவற்றை வழங்குகின்றார்கள்.

இந்தமுறையில் தான் கடந்த 2010 தேர்தலிலும் இவ்வாறான சலுகைகளை மக்களுக்கு பெற்றுக் கொடுத்து வாக்குகளை பெற்றவர்களில் சில தமிழ் அமைச்சர்களும் இருக்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு தையல் இயந்திரம், சைக்கிள் வழங்கி வாக்குகளைப் பெற்றவர்கள் அதற்குப் பின்னர் 2010ம் ஆண்டு நடத்தபட்ட ஐ.நா.சபை அமர்வின் போது இலங்கையில் நடந்த யுத்தத்தில் ஒரு தமிழ் மகனை கூட இராணுவத்தினர் கொள்ளவில்லை, விடுதலைப்புலிகள் தான் தமிழ் மக்களைக் கொன்றார்கள் என சாட்சியமளித்தார்கள் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

-பிராந்திய செய்தியாளர்-

 

P1170870 P1170872 P1170876