விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் மரணம்!!

912

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நண்பரான நடிகரும், பிரபல தயாரிப்பாளருமான இப்ராஹிம் ராவுத்தர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடித்த பல படங்களை தயாரித்த திரைப்பட தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர், அண்மையில் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்த அவரை நண்பர் விஜயகாந்த் நேரில் பார்த்து கண்ணீர் விட்டு அழுததுடன், “நண்பா நீ எழுந்து வருவாய்” என்று உருக்கமான அறிக்கையும் வெளியிட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ராவுத்தர் இன்று காலை காலமானார். இதையடுத்து, விஜய்காந்த் இப்ராகிம் ராவுத்தரின் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவருடன் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், மைத்துனர் சுதீஷ் ஆகியோரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

21 22