சம்பியன்ஸ் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இன்றைய போட்டியில் இலங்கை இந்திய அணிகள் மோதுகின்றன. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. அதற்கேற்ப முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்கள் அபாரமாக துடுப்பெடுத்தாடினர். 50 ஓவர் நிறைவில் 3 விக்கட்டுகளை இழந்து 333 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். அதிகபட்சமாக தில்ஷான் 84 ஓட்டங்களையும் குஷால் பெரேரா 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.




