பெண்களின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்காகவே இத் தேர்தலில் போட்டியிடுகின்றேன் : வேட்பாளர் சிவரதி ராஜ்குமார்!!(காணொளி)

1122

P1180012

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் வன்னி வேட்பாளர் திருமதி சிவரதி ராஜ்குமார் அவர்கள் வவுனியா நெற் இணையத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வியின் போது அவர் தெரிவித்த கருத்துக்கள்..

நான் ஒரு பெண் என்ற வகையில் பெண்களிக்கான உரிமைகள் உலக அரங்கில் பேசப்பட வேண்டும், அவற்றினை நாங்கள் அடைந்தே தீரவேண்டும் என்ற மன வைராக்கியத்துடன் கடந்த காலங்களில் எதிரிகள் ஆக்கப்பட்ட எங்களுடைய இனம் சார்ந்தது அதிலும் முக்கியமாக பெண்கள் சார்ந்து பேசப்படாத நிலையில் அவர்களது உரிமைகள் அடையப்படாத நிலையில் இன்று வடக்கு, கிழக்கு தாயகத்தில் கிட்டத்தட்ட 90 000 பெண் தலமைத்துவ குடும்பங்கள் வாழ்கின்றன.

இவ்வாறான பெண்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டார் என்றால் கடந்த 67 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் மீது தினிக்கப்பட்ட ஒடுக்குமுறைகளும் வன்முறைகளும் இன அழிப்புகளும் எங்கள் மக்களின் வாழ்க்கையை துலைத்த அந்த நிகழ்வுகள் பேரினவாத சக்திகளால் முன்னெடுக்கப்பட்ட அழிப்புகளால் நாம் பாதிக்கப்பட்ட இனமாகவும் முக்கியமாக அதிலும் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக வாழ்கின்ற இந்த நிலையில் பெண்களுக்கான ஒரு மீள் வாழ்க்கையைக் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பு காரணமாக நாங்கள் பெண்களுக்கு வேலை செய்ய வேண்டிய ஒரு காலத்தின் கட்டாயம் எங்கள் மீது இருக்கின்றது.

பெண்கள் முன்நிலைக்கு வர வேண்டும் என்ற முனைப்புக் கொண்ட பெண் என்பதால் நான் பெண்களுக்காக என்னுடைய குரலை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்வேன் எனவும் தெரிவித்தார்.

அவர் வழங்கிய முழுமையான செவ்வியை கீழ் உள்ள காணொளியில் காணலாம்.

-பிராந்திய செய்தியாளர்-