‍கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த ஆசிரியை!!

618

Murder

மராட்டிய மாநிலத்தில் உள்ள பால்கர் நகரில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியை ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது சந்தோஷத்துக்கு தடைக்கல்லாய் இருந்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.

பள்ளி ஆசிரியையாக பணியாற்றிவரும் சமீடா என்பவருக்கும் அதே பகுதியில் டிராவல் ஏஜென்சி நடத்திவரும் சந்தோஷ் யாதவ் ஷன்கே என்பவருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

இந்த தகாத உறவை அவரது கணவர் சமீர் பலமுறை தட்டிக்கேட்டு வந்துள்ளார்.
இதனால், கணவன்- மனைவிக்கு இடையில் நீண்ட காலமாக சண்டை- சச்சரவு நிலவி வந்துள்ளது.

இதன் காரணமாக தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து தனது கணவன் சமீரை கொலை செய்ய திட்டமிட்ட சமீடா கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.

இந்நிலையில், தனது மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகப்படுவதாக சமீரின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையின்போது உண்மைகள் தெரிய வந்ததும், குற்றவாளிகள் சமீடா மற்றும் சந்தோஷை கைது செய்த பொலிஸார், சிறையில் அடைத்தனர்.