வவுனியாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் சிலை திறப்பு!!(படங்கள்)

797

முன்னாள் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக மூன்று தடவை பதவி வகிந்த சிவசிதம்பரத்தின் சிலை இன்று (25.07.2015) சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவரின் ஞாபகார்த்தமாக வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் மக்கள் சேவை மாமணி சேனாதிராஜா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட சபை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சிற்றம்பலம் சிலையை திறந்து வைத்தார்.

இதேவேளை கலாபூசணம் தேவராசா மலர் மாலை அணிவித்ததுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற வேட்பாளாகள் மக்கள் என பலரும் மாலை மற்றும் மலர் தூவி திருவுருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

-பிராந்திய செய்தியாளர்-

P1180112 P1180115 P1180118 P1180122 P1180125 P1180127 P1180128 P1180130 P1180134 P1180138 P1180139 P1180145 P1180153