போராளிகளின் நினைவுத்தூபியினை முள்ளிவாய்க்காலில் அமைப்பேன் : அகில இலங்கைத் தமிழர் மகா சபையில் முதன்மை வேட்பாளர் இராசதுரை செல்வராணி!!(காணொளி)

964

Capture

வன்னி மாவட்ட அகில இலங்கைத் தமிழர் மகா சபையில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் இராசதுரை செல்வராணி வவுனியா நெற் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி..

அமைச்சர் ரிசாட் பதியுதின் தமிழ் மக்களுக்கு 100 வீதம் வீட்டுத் திட்டம் வந்தால் அதில் 10 வீதம் மட்டுமே தமிழ் மக்களுக்கு வழங்குகின்றார். மிகுதி வீட்டுத்திட்டங்களை முஸ்ஸிம் மக்களுக்கு வழங்குகின்றார். ஆனால் அவ் விட்டுத்திட்டம் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியிருந்தால் பராவாயில்லை.

வீடு இருப்பவர்களுக்கே அவ் வீட்டுத்திட்டம் வழங்கப்படுகின்றது . ஆனால் அவ் வீடுகளில் அவர்கள் வசிப்பதில்லை. எங்களுடைய தமிழ் மக்கள் வீடு இல்லாமல் இன்னும் குடிசைகளை அமைத்து எவ்வளவு கஸ்டத்தின் மத்தியில் வாழ்கின்றார்கள். குடிசை வாழ் முஸ்ஸிம் மக்களே இல்லை. தமிழ் மக்கள் தான் இன்றும் குடிசை வாழ் மக்களாக இருக்கின்றார்கள்.

இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட்டார்கள். இதற்கு 50வீதம் இராணுவத்தினர் தான் காரணம் என நான் நினைக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆட்சிமைத்து மக்களுடைய தேவைகளில் 10 சதவீதத்தை மட்டுமே பெற்றுக் கொடுத்தார்கள். ஆனால் தங்களுடைய தேவைகளை 100வீதம் பூர்த்தி செய்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்காக என்ன செய்துள்ளது?

தமிழ் மக்கள் இறுதி யுத்தத்தின் போது கொலைசெய்யப்பட்டார்கள். இதனை ஒரு இனப்படுகொலை என்று தான் கூற முடியும். தமிழன் சாகப் பிறந்தவன் இல்லை, சாதிக்கப் பிறந்தவன். வாக்கு என்பது எங்களது உரிமை. அதை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இதுவரையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள்?

வவுனியாவில் மாத்திரம் 69 சிறியகிராமங்கள் காணப்படுகின்றது. தேர்தல் காலங்களில் மாத்திரம் அக் கிராமத்திற்கு சென்று வாக்குகளை கேட்கின்றார்கள். தேர்தல் நிறைவுற்றதன் பின்னர் எந்த ஒரு கிராமத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வதில்லை.

தமிழ் மக்களை அடக்குமுறை செய்வதற்கே வட பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நான் கண்டனம் தெரிவிக்கின்றேன். எங்களது (வடக்கு-கிழக்கு) பகுதியில் இருந்து இராணுவத்தினர் அகற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இவரது முழுமையான செவ்வியினை கீழுள்ள காணொளியில் காணலாம்..

-பிராந்திய செய்தியாளர்-