புன்னகை அமைப்பால் (Smile Foundation) இன்று (26.07.2015) காலை 10 மணியளவில் பம்பைமடு வைத்தியசாலை மற்றும் வவுனியா பொது வைத்தியசாலையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் படுக்கைப்புண்களை குணப்படுத்தும் வகையில் நீர் மெத்தைகள் வழங்கப்பட்டது.
பயனாளிகளுக்கான நீர் மெத்தைகளை புன்னகை அமைப்பின் போசகர்களில் ஒருவரும் துணுக்காய் பிரதேச செயலாளருமான திரு.S.குணபாலன் அவர்களும் வவுனியா மாவட்ட சிரேஷ்ட தாதியர் பரிபாலகரும் வழங்கியிருந்தனர். இந் நிகழ்வில் மேலும் புன்னகை அமைப்பின் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், மற்றும் உயிரில்லை அமைப்பின் தலைவர் அவர்களும் பயனாளிகளும் கலந்து கொண்டிருந்தனர்.






