எங்களுடைய இனத்தையும் தனித்தன்மையையும் விட்டுக் கொடுக்க முடியாது : V.S.விசாகப்பெருமாள்!!(காணொளி)

675

Capture

தமிழர் விடுதலைப் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் திரு V.S.விசாகப்பெருமாள் (அகில இலங்கை சமாதான நீதவான், முன்னாள் கிராம சேவையாளர்) அவர்கள் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் தெரிவித்த கருத்துக்கள்..

தாண்டிக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணம் வரை பொன் விளையும் காணிகள் அனைத்தையும் இராணுவத்தினர் வயல்களும் தோட்டங்களும் செய்து அவர்கள் பிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் காணிகள் உடனடியாக மீட்கப்பட்டு உரிய மக்களிடம் வழங்கப்பட வேண்டும்.

நாங்கள் எங்களுடைய இனத்தையும் எங்களுடைய இனத்திற்குரிய தனித்தன்மையையும் விட்டுக் கொடுக்க முடியாது. எங்களுடைய மக்களை எங்களால் பாதுகாக்க முடியும். மக்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.

இராணுவத்தினுடைய சேவை தமிழ் மக்களுக்கு தேவையில்லை. அவர்கள் நாட்டை மாத்திரம் பாதுகாத்தால் போதும். அவர்கள் எங்களுடைய பூமியின் வளங்களை சுரண்டி வாழ்ந்து கொண்டு தமிழ் மக்களுக்கு உதவி புரிவதாக தெரிவிக்கின்றனர். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ் மக்களின் கலை, கலாச்சாரம் எல்லாம் இராணுவத்திரனால் பாழடிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலத்தில் கலை என்றால் என்ன? கலாச்சாரம் என்றால் என்ன? என்று தெரியாத ஒரு சூழலில் எங்களுடைய தமிழ் இனம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

போதைப்பொருட்கள் எமது வட பகுதிக்கு வரவழைக்கப்படுகின்றன. மக்களுக்கு இலஞ்சமாக சைக்கில்களும் உடைகளும் மதுபானங்களும், உணவுகளும் வழங்கி மக்களிடம் வாக்குகளைப் பெற முயற்சி செய்கின்றனர். அப்படி வாக்குகளைப் பெறவேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று தெரிவித்தார்.

அவரது முழுமையான செவ்வியினை கீழுள்ள காணொளியில் காணுங்கள்..

-பிராந்திய செய்தியாளர்-