வவுனியாவில் நடைபெற்ற சர்வதேச நாட்டியப்  பெருவிழா!!(படங்கள்)

761

வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியும் லண்டன் ஜெயாஞ்சலி நிறுவனமும் இணைந்து வழங்கிய நாட்டியப்  பெருவிழா நேற்று முன்தினம்(02.08.2015) மாலை 4.00 மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வை தென்னிந்திய நடனத்துறை சார்ந்த வெள்ளித்திரை, சின்னத்திரை கலைஞர்களுடன் சுவிஸ் நோர்வே, டென்மார்க் மற்றும் இலங்கைக் கலைஞர்கள் இணைந்து வழங்கியிருந்தனர்.

நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் க.உதயராசா, தமிழ்மணி அகளங்கன், கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராஜா மற்றும் இந்தியாவின் ஊடகவியலாளர் சேயில்பாண்டியன் ஆகியோர் உட்பட பெருமளவிலான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

001 01 1 2 3 4 5 87