வவுனியா செட்டிகுளம் கந்தசாமி நகரில் மக்கள் சந்திப்பு ஒன்றை நேற்று (05.08.2015) சிவரதி ராஜ்குமார் மேற்கொண்டார். அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்..
கந்தசாமி நகர் பிரதேச மக்கள் குடிநீர், முன்பள்ளி, பொதுக்கட்டிடம் இன்மையால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு குடிசைகளில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ் சமுகம் யுத்தத்தினால் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளது. 67வருடங்களாக தமிழ் இனம் பாரிய இனமாக காணப்பட்டது. பாரிய நிலப்பரப்பு எங்களுக்கு என்றொரு மொழி, பண்பாடு காணப்பட்டலும் கூட இலங்கை நாட்டில் தமிழ் இனம் சிறுபான்மை இனமாக காணப்படுகின்றது.
தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மக்கள் குடியேறி வாழ்கின்றார்கள். சிங்கள இராணுவம் தமிழ்ப் பிரதேசங்களை ஆக்கிரமித்துள்ளனர் என்று தெரிவித்தார்.
-பிராந்திய செய்தியாளர்-






