வன்னியில் சுயமாக எதையும் செய்யக்கூடிய நிலை இல்லை : கே.கே.மஸ்தான்!!(காணொளி)

608

11

யுத்தம் முடிந்து 5 வருடங்கள் சென்றும் இன்னும் பயந்த சூழ்நிலையே வன்னியைப் பொறுத்தவரை காணப்படுகிறது. சுயமாக எதையும் செய்யக்கூடியநிலை வன்னியைப் பொறுத்தவரை இல்லை. இதில் மாற்றத்தை முதலில் ஏற்படுத்தவேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வன்னி வேட்பாளர் கே.கே.மஸ்தான் வவுனியா நெற்றிக்கு அளித்த சிறப்புப் பேட்டியின் போது தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்..

அரச உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் சம்பந்தமான பிரச்சினை இருக்கின்றது. இவ்வாறான பல்வேறு பிரச்சினைகளுக்கு நான் தீர்வுகாண முனைவேன். வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல், கல்வித்துறையில் பின்தங்கிய நிலையை நீக்கல், மக்களுக்குரிய பாரிய விவசாயத்தை முன்னேற்றகரமாக மேற்கொள்ளல், இன விகிதாசாரமுறையில் சேவைகளை மேற்கொள்லல், மாணவர்களுக்கான உதவிகளை வழங்குதல்,

எமது வன்னி மக்கள் 30 வருடமாக காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாமல் இங்கேயிருக்கின்றார்கள் எனவே காணி உறுதிப்பத்திரங்களை அவர்களுக்கு பெற்றுக்கொடுத்தல், யுத்தத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவுதல் போன்ற சேவைகளையும் நான் செய்யத்தயாராக உள்ளேன் எனத் தெரிவித்தார்.

மேலதிக செவ்வியை காணொளியில் காணலாம்

-பிராந்திய செய்தியாளர்-