அகில இலங்கை தமிழர் மகா சபையின் பெண் வேட்பாளர் இராசதுரை செல்வராணி கொக்குத்தொடுவாய், கொக்குலாய், கர்நாட்டுக்கேணி, செம்மலை பிரதேச மக்களை நேரடியாக விஜயம் மேற்கொண்டு பெண் தலமைத்துவத்தை கொண்ட குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை கேட்டறிந்தார்.
அத்துடன் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழர்களின் வயல்க் காணிகளை பெரும்பான்மை இனத்தவர்கள் அபகரித்து தமிழர்கள் விவசாயம் செய்வதற்கும் அனுமதிப்பதில்லை எனவும் அக் காணிகளை தமிழ் மக்களுக்கு பெற்றுத்தருவதாகவும்., செம்மலை மக்களுடைய புளியமுனை காணிகளை அவர்கள் சென்று பார்வையிடுவதற்கும் அவர்களுக்கான காணி உறுதிகளை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமயத்தில் சுய தொழிலில் ஈடுபட்ட பெண்ணிற்கு அதனை தொடர்ச்சிகாக மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வதாக வாக்குறுதியளித்தார்.
-பிராந்திய செய்தியாளர்-






