சுந்தர் பிச்சைக்கு குவியும் வாழ்த்துக்கள்!!

1404

sundar

இணையங்களை இணைக்கும் தேடுபொறிகளில் தலைமை இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள கூகுளின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

சுந்தர் பிச்சைக்கு பல்வேறு தொழில்நுட்ப ஜாம்பவான்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் சத்யா நடெல்லா ´தகுதிக்கேற்ற பணியில் நியமிக்கப்பட்டுள்ளமைக்காக´ சுந்தர் பிச்சையை வாழ்த்தியுள்ளார்.

இதேபோல, கூகுள் மேப்பின் இணை நிறுவனர், கூகுளின் செயல் தலைவர் என அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்களின் பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளும் அவரை வாழ்த்தி டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வாழ்த்துக்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்து வருகிறார் சென்னைக்காரரான சுந்தர் பிச்சை.