
ஈழமக்கள் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்) முதன்மை வேட்பாளர் ஏ.ஈ.இராசநாயகம் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் போது பின்வருமாறு தெரிவித்தார்..
2004ம் ஆண்டிருந்து கன்னாட்டி கிராமத்தில் மீள்குடியேறி பண்ணை முகாமையாளராக செயற்பட்டு வருவதுடன் கன்னாட்டி கிராமத்தின் சிவில் பாதுகாப்புக் குழுத் தலைவராகவும் கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளராகவும் விவசாய அமைப்பின் பொருளாளராகவும் சேவை செய்து வருகின்றேன்.
நாங்கள் பாராளுமன்றம் சென்றால் 13வது சட்டத்திருத்தத்தை வலுப்படுத்தி வடக்கு, கிழக்கு மாகாண சபையை பூரண அதிகாரத்துடன் செயற்படுத்த சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரப் பரவலாக்கலை ஏற்படுத்தி வடக்கு- கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் சகல மக்களுக்கும் சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்வதற்கும் வடக்கு, கிழக்கின் பொருளாதாரத்தினை தன்னிறைவுப் பொருளாதாரமாக மாற்றியமைத்து இன, மத, மொழி, பிரதேச ரீதியான பாகுபாடற்ற ஓர் உயர்ந்த பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட அன்புச் சமுதாயத்தை உருவாக்குவதற்கு இதே நோக்கத்தைக் கொண்ட அனைத்துப் பிரிவினருடனும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
மேலும் வன்னிப் பிரதேசத்தை வடக்கு கிழக்கின் மையமாக ஏற்படுத்தி சகல துறைகளிலும் வன்னிவாழ் மக்கள் சர்வதேச தரத்திற்கு ஈடாக அபிவிருத்தி அடைவதற்கு மத்திய அரசிடமும் ஏனைய நட்பு நாடுகளிடமும் சர்வதேச அபிவிருத்தி அமைப்புக்களிடமும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு அதற்கான திட்டங்களை அமுல்படுத்த முன்னின்று உழைப்போம் எனவும் தெரிவித்தார்.
அவரது முழுமையான செவ்வியை கீழுள்ள கானொளியில் காணுங்கள்..
-பிராந்திய செய்தியாளர்-





