வவுனியாவில் வாக்குகள் மீள எண்ணப்படுகிறது – விருப்பு வாக்கு எண்ணுதல் தாமதம்..!

345


Vanni

வவுனியாவில் மாவட்டச் செயலகத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்து விருப்பு வாக்குகள் என்னப்படவிருந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவல்களின்படி குறித்தவொரு வாக்கெஎண்ணும் அறையில் வாக்குகளை மீள எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் அதிருப்தி தெரிவித்ததின் பேரிலேயே குறித்த அறையில் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு வருகிறது. இதனால் விருப்பு வாக்கு எண்ணும் பணிகள் சற்று நேரம் தாமதமடையலாமென தெரிவிக்கப்படுகிறது.