அமெரிக்காவில் மேயராகப் பணியாற்றும் 3 வயது குழந்தை!!

335

USA-CM-600x386மூன்று வயது குழந்தை ஒரு ஊரின் மேயராக முடியுமா என்கிற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தின் வடபகுதியில் டோர்செட் என்கிற சிறிய ஊர் உள்ளது.வெறும் 22 குடும்பங்கள் மட்டுமே வசித்து வரும் இந்த ஊருக்கு மேயரை தேர்ந்தெடுக்கும் வழிமுறை மிகவும் சுலபமானது.

மேயராக விருப்பமுள்ளவர்கள் ஒரு அமெரிக்க டாலருக்கு, ஒரு டிக்கெட் வாங்க வேண்டும். அதன்மூலம், குலுக்கல் முறையில் மேயர் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர் ஒரு வருடத்துக்கு மேயராக பணியாற்றலாம். அந்த வகையில் தற்போது புதிய மேயராக 3 வயது நிரம்பிய ஜேம்ஸ் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ளார்.

டோர்செட்டின் குறும்புக்கார புதிய மேயர் ஜேம்சுக்கு(3) ஏற்கனவே இரு முறை மேயர் பதவி வகித்த அவனது ஆறு வயது அண்ணன் ராபர்ட் டஃப்ட்ஸ், ‘மக்களிடம், மரியாதையாகவும், நல்ல முறையிலும் பழக வேண்டும்’ என ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த பதவி குறித்து அவர்களின் தாயாரிடம் கேட்டபோது, தனது இரு மகன்களும் இந்த வயதிலேயே மேயராகி ஊரின் நன்மைக்காக உழைப்பது பெருமையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். மூத்த மகன் மேயர் பதவி வகித்த காலகட்டத்தில் அவர், தொண்டு நிறுவனங்களுக்காக நிதி திரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.