இளநீர் அருந்திய தந்தையும் மகளும் பலி!!

1281

Ilani

புத்தளம் – கோட்டுகச்சிய பிரதேசத்தில் இளநீர் அருந்திய தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

சுகயீனம் ஒன்றிற்கு நிவாரணம் பெற அப் பகுதி புனிதத் தலம் ஒன்றிற்கு சென்றிருந்த வேளையே அவர்கள் இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளனர்.

மகள் கடந்த 18ம் திகதி உயிரிழந்திருந்த போதும், தந்தை சிலாபம் வைத்தியசாலையில் இருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனைகள் இன்றும் இடம்பெறவுள்ளன.

இது குறித்த மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.