வவுனியாவில் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனால் வாழ்வாதார உதவிகள்!! (படங்கள்)

587

வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியாவில் வாழ்வாதார உதவிகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (24.08) அவரது பிரேத்தியேக அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியாவில் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கும், வறுமை கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்குமான வாழ்வாதார உதவிகளாக 25 குடும்பங்களுக்கு 41 கோழி குஞ்சுகள் மற்றும் பராமரிப்பு பொருட்களும், 01 குடும்பத்திற்கு வீட்டுக்கு தேவையான சமையல் உபகரணங்கள் மற்றும் 01 குடும்பத்திற்கு துவிச்சக்கர வண்டியும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதாவும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கியஸ்தரும் வடமாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா கால்நடை திணைக்களத்தின் வைத்திய அதிகாரி கனகரத்தினம், திணைக்களத்தின் போதனாசிரியர் கலாரதி, திணைக்கள ஊழியர்கள், பயனாளிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தம்பா ரவி, நிஷாந்தன், ஐயா, ஆகியோரும் மாகாண சபை உறுப்பினரின் பிரேத்தியே செயலாளரும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் ஸ்ரீ.கேசவன், பொருளாளர் த.நிகேதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

IMG_1270 IMG_1274 IMG_1284 IMG_1300 IMG_1304 IMG_1305 IMG_1307 IMG_1309 IMG_1314 IMG_1317 IMG_1318 IMG_1322 IMG_1326 IMG_1327 IMG_1344