நீண்ட நாட்களாக போக்குவரத்துச் சேவைகள் எதுவும் இன்றிய நிலையில் காணப்பட்ட வவுனியா ஆச்சிபுரம் பிரதேசத்திற்கான பயணிகள் பஸ் சேவையானது குறித்த பிரதேச மக்களால் வடமாகாண சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அமைச்சரின் துரித நடவக்கைக்கு அமைய குறித்த பயணிகள் பஸ் சேவையானது அண்மையில் வட மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.






