எரிமலைகளுக்கு அடியில் கிடக்கும் பெருந்தொகை தங்கம், வெள்ளி!!

756

1987166396Untitled-1நியூசிலாந்தில் உள்ள வட தீவில், டூபாவ் எரிமலைப் பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கு அடியில் தங்கமும், வெள்ளியும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் புவியின் உட்புறத்தில் இருக்கும் வெப்பத்தைப் பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்த சர்வதேச புவியியல் வல்லுநர் குழு இதனை கண்டறிந்துள்ளது.

இப்பகுதியின் ஆறு நீர்த்தேக்கங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்போது கணக்கிட முடியாத அளவுக்கு தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் நிறைந்திருப்பது தெரியவந்தது. ஏற்கனவே, இங்கு தங்கம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. எனினும் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்பதைப் பற்றி தெளிவாக தெரிந்திருக்கவில்லை.

‘கைக்கெட்டியது வாய்க்கு எட்டாது’ என்பது போல எரிமலைகளின் அடியில் இருக்கும் நீர்த்தேக்கங்களில் அதன் கீழ் அடுக்குகளில் உள்ள வெப்பத்தால், அங்கிருந்து இந்த உலோகங்களை வெளியில் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், ‘இதற்கென ஒரு சரியான உபகரணம் தயார் செய்தால் ஆண்டுக்கு, 680 முதல் 7500 கிலோ கிராம் வரையான தங்கம் இங்கிருந்து எடுக்க முடியும் என்கின்றனர்’, புவியியல் வல்லுநர்கள்.

இந்த நீர்த்தேக்கங்களில் பூமியின் கீழ் அடுக்கில் உள்ள வெப்பத்தால் பல்லாண்டுகளாக, இதுபோன்ற விலைமதிப்பில்லாத உலோகங்கள் எரிமலையின் அடிப்பகுதிகளில் சேர்ந்து வருவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.