வட மாகாண சபை தேர்தல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள், ஆசனப் பங்கீடுகள் விபரம்!

307

TNA-logo

 

 

 

 

 

 

 

 

 

 

 

வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கு இடையே இணக்கம் காணப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நியமனக்குழுக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் யாழ்ப்பாணம், வவுனியா கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் வேட்பாளர் பங்கீட்டு விபரம்:

யாழ். மாவட்டம்

தமிழரசு கட்சி – 7 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 4 ஆசனங்கள்
டெலோ – 3 ஆசனங்கள்
புளொட் – 2 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 2 ஆசனங்கள்

கிளிநொச்சி மாவட்டம்

தமிழரசு கட்சி – 3 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 1 ஆசனம்
டெலோ – 1 ஆசனம்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 2 ஆசனங்கள்

முல்லைத்தீவு மாவட்டம்

தமிழரசு கட்சி – 2 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 2 ஆசனங்கள்
டெலே – 2 ஆசனங்கள்
புளொட் – 1 ஆசனம்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 1 ஆசனம்

வவுனியா மாவட்டம்

தமிழரசு கட்சி – 2 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 2 ஆசனங்கள்
டெலோ – 2 ஆசனங்கள்
புளொட்- 2 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 1 ஆசனம்

மன்னார் மாவட்டம்

தமிழரசு கட்சி – 2 ஆசனங்கள்
டெலோ – 3 ஆசனங்கள்
ஈ.பி.ஆர்.எல்.எப் – 2 ஆசனங்கள்
புளொட் – 1 ஆசனம்

இந்த அடிப்படையில் ஐந்து மாவட்டங்களுக்கும் ஆசனப் பங்கீடுகள் நடைபெற்றிருப்பதாகவும் இதன் அடிப்படையில் கட்சிகள் வேட்பாளர்களை தெரிவு செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் 26ம் மற்றும் 27ம் திகதிகளில் வெளியிடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.