வவுனியா புதிய சின்னக்குளத்தில் மரண சடங்குகளை ஒழுங்கமைத்து மேற்கொள்ளும் சங்கத்தினரின் வேண்டுகோளிற்கிணங்க, கழகத்தின் மறைந்த உபதலைவர் தோழர் மாணிக்கதாசன், தோழர் இளங்கோ, தோழர் வினோ நினைவாக ஒரு தொகை உதவிப்பணம் கழகத்தின் போர்த்துகல் (கொலண்ட்) கிளையினரால் வழங்கப்பட்டது.
இவ் உதவியினை கழகத்தின் மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமான திரு. க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் நேற்று (03.09) சங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
இன் நிகழ்வில் கழகத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான முத்தையா கண்ணதாசன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் காண்டீபன், செயலாளர் கேசவன், பொருளாளர் நிகேதன், ஊடக இணைப்பாளர் பிரதீபன், புதிய சின்னக்குளம் கிராம அபிவிருத்தி தலைவர் நாதன், மயான சங்கத்தின் செயலாளர் ஜெ.ஜெயநேசன், பொருளாளர் இரத்தினசிங்கம், உப பொருளாளர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் உதயன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.






