ஐ.எஸ்.ஐ தீவிரவாத இயக்கத்துக்கு பெண்களை பிடித்து தரும் பெண்முகவர் கைது!!

306

odm1_mini-720x480

சிரியா மற்றும் ஈராக்கில் பல அட்டுழியங்களை அரங்கேற்றி வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு பெண்களை பிடித்து தரும் முகவராக செயலாற்றி வந்த 18 வயது மதிக்க தக்க பெண்னை ஸ்பெயின் நாட்டு பொலிஸார் கைது செய்து, கைவிலங்கிட்டு வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான வாலிபர்களும், இளம்பெண்களும் சிரியாவுக்கு தப்பிச் சென்று அங்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் படைகளில் சேர்ந்து சண்டையிட்டு வருவதால் தங்கள் நாட்டில் உள்ளவர்களின் இணையதள நடமாட்டத்தை ஸ்பெயின் ரகசிய பொலிஸாரும் உளவுத்துறையினரும் மிக தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், இங்குள்ள வாலன்சியா நகரின் அருகாமையில் உள்ள கன்டியா பகுதியில் வசித்துவந்த மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சுமார் 18 வயது மதிக்கத்தக்க இளம்பெண், இணையதளத்தின் மூலமாக இளம்பெண்களை மூளைச்சலவை செய்து அவர்களை சிரியாவுக்கு அனுப்பி வைக்கும் முகவராக செயல்பட்டு வந்ததை ரகசிய பொலிஸார கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அந்த இளம்பெண் வசித்துவரும் வீட்டை சுற்றி வளைத்து அவரை கைது செய்து, கை விலங்கிட்டு வீதிகளின் வழியாக பொலிஸார் அழைத்துச் சென்றனர்.

அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பான ஆவணங்களை உடன் சென்ற இரு பொலிஸார் சில அட்டைப் பெட்டிகளில் கொண்டு சென்றனர்.

கைதான இந்தப் பெண்ணும் விரைவில் சிரியாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்ததாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.