வவுனியா புளியங்குளப்பகுதியில் மல்லிகைப்பூச் செய்கை வடமாகாண ஆளுநரினால் இன்று(18.09) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நெடுங்கேணி புளியங்குளம் கிராமசேவகர் பிரிவில் பழையவாடி தனியார் பண்ணையில் இந்தியா மதுரையிலிருந்து கொண்டுவரப்பட்டு இக்கிராமத்தில் இச்செய்கையினை வடமாகாண ஆளுநர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து நாட்டி வைத்துள்ளார்.
இன் நிகழ்வில் இந்திய தூதரக அதிகாரி ஏ.நடராஜா அவர்களும் வட மாகாண அளுநரின் செயலாளர் மற்றும் மதகுருமார்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.






