வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டப் பகுதியில் உள்ள நாகபூசனி அம்மன் ஆலயத்தில் ஆவணி சதுர்த்தி தினமாகிய 17.09 நேற்று முன்தினம் கடவுளாக நினைத்து வழிபட்டு வந்த சிறிய கல்லில் பிள்ளையார் உருவம் தெரிந்த அதிசயம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டப் பகுதியில் ஸ்ரீநா பூசணி ஆலயத்தில் வேப்பமரத்தின் கீழ் இரண்டு கற்கள் வைத்து அரச ஊழியர்கள் வழிபட்டு வந்தனர். கடந்த ஆடிப்பூரநாள் அன்று பெரிய கல்லில் ஸ்ரீநாகபூசணி அம்மன் உருவம் தோன்றியது. அதன் பின்னர் ஆவணி சதுர்தி தினத்தில் சிறிய கல்லில் பிள்ளையார் உருவம் தென்பட்டுள்ளது
இவ்வாலயத்தில் பல அதியங்கள் நிகழ்ந்து வருகிறது. புற்றில் நாகபாம்பிற்கு பால் வைத்து நாகவழிபாடும் இடம்பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.






