வவுனியா பிரதேச செயலக மட்டத்திலான வாழ்வின் எழுச்சி விற்பனைக் கண்காட்சி இன்று(22.09) காலை வவுனியா மாவட்ட அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திர தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட வாழ்வின் எழுச்சித்திட்டப் பயணாளிகளின் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது. பெருமளவான வியாபாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சுயதொழிலில் ஈடுபட்டவர்கள் தமது பொருட்களையும் விவசாயிகள் தமது உற்பத்திப்பொருட்களையும் விற்பனை செய்தனர்.
வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, திட்டமிடல் பணிப்பாளர், தலைமையக முகாமையாளர், வாழ்வின் எழுச்சித்திட்டம் மற்றும் பிரதேச செயலக மாவட்ட செயலக ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
இக் கண்காட்சி இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. பொதுமக்களும் இக் கண்காட்சியினைப் பார்வையிட முடியும்.






